Latest Movie :

தமிழ் ஜோக்ஸ்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )


இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் ..s

ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- -------- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்



என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .



பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!



என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!



டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.



பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

யோசிக்கனும்............ ...!!



தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .

ஆனா

பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,

அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?

(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)



பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.



கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?



பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

இதுதான் உலகம்



T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?



என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .



இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது ,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..



உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .


ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....



நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .



வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது ..


"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?........ "Tea"ல ஒரு "e" இருக்கும்.
"Coffee"ல 2 "e" இருக்கும்.
Share this article :

+ comments + 1 comments

1 March 2010 at 07:59

Awesome!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. watch online tamil movies - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger