பெரும் வெற்றி பெற்ற நான் அவனில்லை ரீமேக்கின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்படவுள்ளது.
1974ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் இயக்கம், ஜெமினி கணேசனின் நடிப்பில் உருவாகிய படம் நான் அவனில்லை.
இப்படத்தை பாலச்சந்தரின் சிஷ்யரான செல்வா, ஜீவனை வைத்து ரீமேக் செய்தார். இப்படத்தில் பிளேபாய் கேரக்டரில் கலக்கி ஜீவனுக்கு ஜோடியாக நமீதா, சினேகா, கீர்த்தி சாவ்லா, தேஜாமயி, மாளவிகா ஆகியோர் நடித்தனர்.
பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை இப்போது செல்வா இயக்கவுள்ளார். ஜீவனே நாயகனாக நடிக்கிறார். ஆனால் முதல் படத்தில் நடித்த ஐந்து ஹீரோயின்களும் இப்படத்தில் இல்லையாம்.
ஐந்து நாயகிகளையும் ஏமாற்றிய பின்னர் கதாநாயகன் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதாகவும், அங்கு அவன் செய்யும் லீலைகளையும் 2ம் பாகமாக எடுக்கவுள்ளாராம் செல்வா.
இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இப்படத்தையும் ஹிதேஷ் ஜபக்கே தயாரிக்கவுள்ளாராம்.
Post a Comment