எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அப்படித்தான் செய்திருக்கப்படும். இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை (Apply) என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும்.
பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும். பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும். இனி பாஸ்வேர்ட் தராமல், நீங்கள் உட்பட, இந்த போல்டருக்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டு
Post a Comment