பெங்களூர்: சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெங்களூர் அருகே உள்ள எலஹங்கா விமான தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை விமானப்படை வீரர்கள் எட்டு பேருக்கு தாம்பரம் விமான தளத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக இருந்தது. இதற்காக அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். சேலையூர் காவல் நிலையத்தி்ல் விசா பதிவுக்காக அவர்கள் வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய பாதுகாப்புத்துறையுடன் தொடர்பு கொண்டு சிங்கள வீரர்களை திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியிருந்தார்.
ஆனால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்பட்ட இலங்கை வீரர்கள் தற்போது பெங்களூரில் ஜாம் ஜாமென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எலஹங்கா விமான தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்த பெங்களூர் வாழ் தமிழர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
Post a Comment