சிட்டிசன், வரலாறு போன்ற படங்களில் அவரது வித்தியாசமான தோற்றம் 'அட' சொல்ல வைத்தது.


அதற்குப் பின் கொஞ்ச காலம் 'அஜீத்'தாகவே வந்து போன அஜீத்துக்கு மீண்டும் வித்தியாசமான கெட்டப்பில் வர ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது அவரது நண்பர் சரண் இயக்கும் 'அசல்' படத்தில்.இந்தப் படத்துக்காக அருவா மீசையும் அசத்தல் லுக்குமாக வரப்போகிறாராம் அஜீத். விருமாண்டியில் கமல் வருவாரே அந்த மாதிரி. இந்தப் படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் மூலம் அஜீத் - சரண் கூட்டணி, மீண்டும் தங்களை ஒரு வசூல் கூட்டணி என நிரூபிக்க சகல முஸ்தீபுகளுடனும் களமிறங்குகிறது.
Post a Comment