Latest Movie :

ரஜினிக்கு கட்அவுட் வைக்கபோகிறேன் -எந்திரனில் கலாபவன் மணி

ஜெமினி', `மறு மலர்ச்சி' எனதமிழ்ப் படங்களில் கலக்கிய கலாபவன் மணி மீண்டும் தமிழுக்கு வருகிறார், எந்திரனில் ரஜினிக்கு வில்லனாக. பொள்ளாச்சி ஷுட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தோம்.

என்னாச்சு, தமிழ்ல பார்க்க முடியல?

``ஆமா ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. ஆனா இப்போ `எந்திரன்', `மோதி விளையாடு', இயக்குநர் சாமியின் `சரித்திரம்'னு நிறைய படம் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.''

`எந்திரனி'ல்' என்ன வேடம்?

``நகைச்சுவை கலந்த வில்லன் வேஷம். படம் பார்க்கும்போது நிச்சயமாக உங்களுக்கே தானாக சிரிப்பு வந்துவிடும். என்னுடைய ரோலை விடுங்கள். ரஜினியுடன் ஷங்கர் படத்தில் நடிப்பதே எனக்கு பெரிய பெருமை. நான் ரஜினியோட தீவிர ரசிகன். கேரளாவுல அவர் படம் ரிலீஸானா கட்அவுட் வச்சு ஊர்வலம் போவோம். இப்போகூட அப்படிச் செய்கிறேன். ஒரு நடிகனா இருந்துட்டு இன்னொரு நடிகருக்கு கட்அவுட் வைக்கிறது நானாதான் இருக்கும்.''

ஐஸ்வர்யா ராய் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

``அவருக்கு என்ன தலைவா! உலக அழகி. படத்தில் பார்ப்பதைவிட நேரில் கொள்ளை அழகு. வருடாவருடம் அவருக்கே உலக அழகிப் பட்டம் கொடுத்துவிடலாம். இப்பவும் ஸ்கூல் பொண்ணு மாதிரியே இருக்கிறாங்க. அதெல்லாம்விட ரொம்ப முக்கியமா என் நடிப்பைப் பாத்து கைதட்டி சிரிக்கிறாங்க. அதுபோதும் எனக்கு.''

சொந்த ஊருக்குச் சென்றால், இப்போதும் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறீர்களே!

``எங்கள் குடும்பம்தான் பெரியதாயிற்றே! அதனால் என்னுடைய படிப்புச் செலவிற்காக, அப்போதே விடுமுறை நாட்களில் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆட்டோ ஓட்டுவேன். நான் நடிகனாக பிரபலமானாலும், என் வருமானத்தில் முதலில் வாங்கிய சொத்து ஆட்டோதான். இப்போதும் ஊருக்குப் போனால் பழசை மறக்காமல் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுவேன்.''

அதெல்லாம் சரி, மலையாளம் போல் தமிழ்ப் படங்களிலும் ஹீரோவாகும் ஆசை இல்லையா!

``ஏன் இல்லை! டைரக்டர் சாமி சாரின் அடுத்த படத்தில் ஐயாதான் ஹீரோ. ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய் நடித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஹி.ஹி...''.

நன்றி!
குமுதம்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. watch online tamil movies - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger