Latest Movie :

ஜாக்சன் உடல் அடக்கம்-பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி


லாஸ் ஏஞ்சலெஸ்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க, பல்லாயிரக்கணக்கானோரின் நேரடி அஞ்சலியுடன், பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நேற்று இரவு பிரியா விடை பெற்றார்.

இதுவரை உலகில் யாருடைய இறுதிச் சடங்கும் இந்த அளவுக்குப் பிரமாண்டமானதாக இருந்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக, கலர்புல்லாக, ஜாக்சனின் இசையை சுவாசித்தபடி, அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் அவரது ரசிகர்கள்.

ஜூன் 25ம் தேதி மரணமடைந்த ஜாக்சனின் உடல் அடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் உடல், பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்பட்டதால், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. ரசிகர்களும் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

அதன் பின்னர் மைக்கேல் ஜாக்சனின் கடைசி விருப்பப்படி அவரது நினைவு நிகழ்ச்சி பிரபலமான ஸ்டேபிள்ஸ் மையத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்திருந்த 20 ஆயிரம் பேர் இந்த நினைவு நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாதிரியார் லூசியஸ் ஸ்மித் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரியா கேரி, டிரே லோரன்ஸுடன் இணைந்து பாடினார்.

ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல் ஒன்றை அவர் பாடினார்.

இசையுலகைச் சேர்ந்த பாரி கோர்டி, கூடைப்பந்தாட்ட வீரர்கள் மாஜிக் ஜான்சன், கோபே பிரையன்ட், ஜெனிபர் ஹட்சன், ஜான் மேயர் என பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பாடகர் ஸ்டீவி ஒன்டர் உருக்கமாக பேசி பாடினார். ஜாக்சனின் நெருங்கிய தோழியான டயானா ரோஸ் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் விடுத்த இரங்கல் செய்திகளை பாடகர் ஸ்மோக்கி ராபின்சன் வாசித்தார்.

முன்னதாக ஜாக்சனின் உடல் ஸ்டேபிளஸ் மையத்திற்கு ரசிகர்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜாக்சனின் ஐந்து சகோதரர்கள், இரு சகோதரிகள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஜாக்சனின் மகள் பாரீஸ் தனது தந்தை குறித்து பேசி முடித்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார். அதேபோல ஜாக்சனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்சனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், ஸ்மைல் என்கிற பாடலைப் பாடினார்.

ஜாக்சனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார்களில் ரசிகர்கள் கிளம்பியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

உலகம் முழுவதும் ஜாக்சனின் நினைவு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யபப்ட்டது. மொத்தம் 16 டிவி நிறுவனங்கள் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள டிவி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

உலகின் மிகப் பெரிய மீடியா நிகழ்ச்சியாக மாறிப் போயிருந்தது ஜாக்சனின் நினைவாஞ்சலி நிகழ்ச்சி.

ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க பூவுலகிலிருந்து விடை பெற்றார் ஜாக்சன்.

டெத் சர்டிபிகேட்..மரணத்திற்கான காரணம் இல்லை

இந் நிலையில் மைக்கேல் ஜாக்சனின் மரணச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில் மரணத்திற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படாமல் உள்ளது.

லாஸ் ஏஞ்சலெஸ் சுகாதாரத் துறை ஜூலை 7ம் தேதி இந்த சான்றிதழை வழங்கியுள்ளது. இதை அக்சஸ் ஹாலிவுட் இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதில் மரணத்திற்கான காரணம் என்ற பகுதி நிரப்பப்படாமல் விடப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சன், வயது 50, இனம் கருப்பர், தொழில் இசை, அனுபவம் 45 ஆண்டுகள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாக்சனின் உடல் நேற்று இறுதிச் சடங்குகள் நடந்த பாரஸ்ட் லான் நினைவுப் பூங்காவில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்சன் குறித்த தகவல்களைத் தந்தவர் என்று அவரது சகோதரியான லா டோயா ஜாக்சனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. watch online tamil movies - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger