நாக்பூர்: பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு 10 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க போயிங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், தனது இந்தியாவில் இந்த ஆள் குறைப்பை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைக்க அது திட்டமிட்டுள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் சின்ன கம்பெனி முதல் பெரிய பெரிய முதலைகள் வரை மண்டை காய்ந்து போய்க் கிடக்கின்றன.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலைதான். இதனால் நிறுவனங்களைக் காப்பாற்றவும், தொழிலாளர்களை முடிந்தவரை காப்பாற்றவும் அவை பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்து வருகின்றன.
இந்த நிலையில் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், 10 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் ஆள் குறைப்பு இருக்காதாம்.
இதுகுறித்து போயிங் நிறுவன முதுநிலை துணைத் தலைவர் (இந்தியா) தினேஷ் கஸ்கர் கூறுகையில், அடுத்த சில நாட்களில் இந்த வேலைக் குறைப்பு அமல்படுத்தப்படும்.
இருப்பினும் இந்தியாவில் இப்போதைக்கு ஆள் குறைப்பு இருக்காது.
போயிங் நிறுவனம் வசம் தற்போது 275 பில்லியன் மதிப்பிலான 3,700 விமானங்களைத் தயாரிக்கும் ஆர்டர் உள்ளது. உலகின் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த ஆர்டர்களைக் கொடுத்துள்ளன. இவற்றை சப்ளை செய்து முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும்.
உலகம் முழுவதும் போயிங் நிறுவனக் கிளைகளில் மொத்தம் 1.76 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இந்திய விமானப்படைக்கு, போயிங் நிறுவனம், பிசினஸ் ஜெட் விமானங்களை வழங்கியுள்ளது என்றார் அவர்.
Post a Comment