வாடிகன் சிட்டி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்ப அனைத்துத் தரப்பினரும் வகை செய்ய வேண்டும் என்று போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாடிகன் நகரில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் போப்பாண்டவர் பேசுகையில்,
சிறிலங்கா அரச படையினரும் விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும்.
மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.
மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment