கொழும்பு: போர் நிறுத்தம் என்ற கோரிக்கை வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ள இலங்கை இதுதொடர்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இலங்கையில் அப்பாவிகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும். இதற்கு வசதியாக போர் நிறுத்தத்தை இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அறிவிக்க வேண்டும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால் இக்கோரிக்கையை இன்று இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபாயா ராஜபக்சே கூறுகையில், இந்தக் கோரிக்கை வேடிக்கையாக உள்ளது.
எந்தவித நிபந்தனையும் இன்றி ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்றார்.
Post a Comment